முக்கியச் செய்திகள் இந்தியா

கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை

கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீனு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும்,கோயில் திருவிழாக்களில் சட்ட-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்பிருந்தாலோ, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதுமானது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால் சட்ட-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறிய நீதிபதி, திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரனாப் முகர்ஜியின் புத்தகத்தில் காங்கிரஸ் குறித்து விமர்சனம்: கருத்து கூற காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு!

Arun

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை

EZHILARASAN D

பொன்னாகுடி நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள்-சபாநாயகர் அப்பாவு ஆய்வு

G SaravanaKumar