எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்றும், ஸ்டாலின் கனவு பலிக்காது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும்…

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்றும், ஸ்டாலின் கனவு பலிக்காது எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை மகபூப்பாளையத்தில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒவ்வொரு தை மாதம் பிறந்தவுடன் தங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது வழக்கமான ஒன்று என்றார். ஆனால், எத்தனை தை பிறந்தாலும் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் நல்வழி பிறக்காது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply