மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை பேசி வருகிறார்; அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்!

மக்கள் கிராமசபை கூட்டம் என்று சொல்லி, ஸ்டாலின் பொய்களை பேசி வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர் வெங்கமேட்டில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

மக்கள் கிராமசபை கூட்டம் என்று சொல்லி, ஸ்டாலின் பொய்களை பேசி வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

கரூர் வெங்கமேட்டில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களை பார்த்து, அண்டை மாநிலங்கள் வியந்து போயியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு இருந்ததாகவும், ஆனால் தற்போது போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply