முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்- ஓ.பன்னீர்செல்வம்

அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று வி.கே சசிகலா கூறி இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்
என்று தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் கழக விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர் முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதைத்தன் கூடாது என்கிறோம்.

அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகாலம் முழுமையாக தமிழகத்தை வழிநடத்தி ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்ற நிலையை அம்மாவும், புரட்சித்தலைவரும் உருவாக்கினார்கள் .அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கழகத்தின் சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும் ஏற்கனவே பழைய உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட வேண்டும் அவற்றை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர்களை வைத்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அப்படி செய்தால் உறுதியாக, கீழ் மட்ட தொண்டர்கள் கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும் அப்படிப்பட்ட சூழ்நிலைதான் எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொதப்பிய ஹைதராபாத்; கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் இலக்கு

Halley Karthik

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

G SaravanaKumar

கேரளாவில் கல்வி முறை சரியில்லை – ஆளுநர் ஆரிப் கான் கருத்து

EZHILARASAN D