தலைவர்களுக்கு இங்கு ஓட்டு இல்லை, காந்தியின் ரூபாய்க்கு தான் ஓட்டு – சீமான் பேட்டி…!

எந்தத் தலைவருக்கும் இங்கு ஓட்டு இல்லை காந்தியின் ரூபாய்க்கு தான் ஓட்டு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“ஜாக்டோ ஜியோ, அமைப்பு வலுவானதாக உள்ளதால் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு வலுவான அமைப்பு எதுவும் இல்லை. ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் வீதியில வந்து போராட்கிறார்கள். ஆனால் யாரும் 1000 ரூபாய் கொடுக்க சொல்லி போராடவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்பு படி நாங்கள் 4% பெறுவோம் என்று கூறப்பட்டது. ஆனால் 8.5% சதவீதம் பெற்றோம். இங்கு தலைவர்களுக்கு ஓட்டு கிடையாது, காந்திக்குத் தான் ஓட்டு. 500, 1000 ரூபாய்க்கு தான் இங்க மதிப்பு.

நாங்கள் தேர்தல் அறிக்கை நாங்க கொடுப்பது இல்லை. அதனை நம்புவதும் இல்லை. வழிபாட்டு தளங்களில் சேகர் பாபு நடந்து கொள்வது அதிகார துஷ்பிரயோகம். விஜய் ஆட்சியில் பங்கு என்பதை கொள்கையாக வைத்துள்ளார். அதனை பல கட்சிகள் விரும்புகின்றன” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.