“3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை…!” – கோரம்பள்ளம் பகுதி மக்கள் சாலை மறியல்

3 நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாக தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…

3 நாட்களாக உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாக தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தூத்துக்குடியில் மத்திய குழு இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது.  தொடர்ந்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் ஆய்வு செய்ய உள்ளார்.  இந்நிலையில்,  3 நாட்களாக உணவு , தண்ணீர் ஏதும் கிடைக்காமல் தவிப்பதாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : நெல்லையில் மழை, வெள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம் – உரிய ஆவணங்கள் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும்…?

தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், அரசு அதிகாரிகள்,  அமைச்சர்கள் யாரும் இன்னும் தங்களது பகுதிக்கு வரவில்லை என குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.  சாலை மறியல் செய்த தங்களை துப்பாக்கியைக் காட்டி போலீசார் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.  விரைவில் தங்களது பகுதிக்கு அரசு அதிகாரிகள் வந்து, உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.