முக்கியச் செய்திகள் தமிழகம்

1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை: பள்ளிகல்வித்துறை

தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை நடைபெறும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபறும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்பது குறித்த  எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,  6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  9ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4 ம் தேதி வரை நடைபெறும் எனவும், நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும் எனவும், அதேசமயம் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியா- இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தள்ளிவைப்பு

Gayathri Venkatesan

பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

Jeba Arul Robinson

நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது: சீதாராம் யெச்சூரி

Niruban Chakkaaravarthi