முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்பிற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைப்பிற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உள்ள நிலையில், அவை பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளதாகவும், விரைவில் அவை சீரமைக்கப்படும் எனவும் புதிதாக சமத்துவபுரங்கள் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் சமத்துவபுரங்களில் உட்கட்டமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில், 2008 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு, ஒப்படைக்கப்படாமலும் உள்ளன.

இந்நிலையில், சமத்துவபுரங்களை சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 14 ஆயிரத்து 880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பெரியார் சிலை பராமரிப்பு, தெரு விளக்கு, சாலை வசதி, நூலகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நல்லகண்ணு தமிழ்நாட்டின் பொக்கிஷம்; அண்ணாமலை

Saravana Kumar

மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Jeba Arul Robinson

பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ezhilarasan