முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு என்றும் தீர்வாகாது என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 1,500 மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ‘ டெல்லியில் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை. முன்னர் நமக்கு கொரோனாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. 21 நாட்கள் வெளியே வராமலிருந்தால் கொரோனா நம்மைவிட்டுப் போய்விடும் என்று கூறினார்கள்.ஆனால் அது நடக்கவில்லை. ஊரடங்கு தொடர்ந்தது. கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு ஒரு தீர்வாகாது’ என்று கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் அவர் ‘ கொரோனா மீண்டும் மீண்டும் வரக் கூடியதாகும். கொரோனா முடிந்துவிட்டதாகக் கருத வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். நாம் கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார். மக்கள் முக கவசம் அணிவது சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மூன்றாவது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டெல்லியில் கொரோனா பரவுவதைத் தடுக்க ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுருக்குமடி வலை ஆய்வு; நடுக்கடலில் அதிகாரிகளை விரட்டிய மீனவர்கள்?

G SaravanaKumar

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: போக்குவரத்து காவல்துறையினர் உறுதிமொழியேற்பு!

Web Editor

வாழ்க்கை ஒரு வட்டம்: நிரூபித்த மகாராஷ்டிரா அரசியல்

Web Editor