நிலம் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம்: பாதுகாப்புக்காக போலீஸார் குவிப்பு

மக்கள் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் துவங்கியது.   கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு…

மக்கள் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் துவங்கியது.  

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்த முயன்று வரும் சூழ்நிலையில், சேத்தியாதோப்பு அடுத்த மேல் வலைமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த முயன்று வருகிறது.

இதையும் படிக்க: தேர்வுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

இந்த நிலையில் 2000 ஆண்டு முதல் கையகப்படுத்திய நிலத்திற்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீழ்வளையமாதேவி பகுதியில் 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலப்பரப்பை என்எல்சி நிறுவனம் தற்போது சமப்படுத்தும் பணியை செய்து வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.