தமிழகம் செய்திகள்

குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!

சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளைப் பிடித்து வனத்தில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சில குரங்குகள் தஞ்சமடைந்த ன. தற்போது அந்த மரத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

இந்த குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள் மற்றும் துணி மணிகள், புத்தகங்கள் உள்ளிடவற்றை எடுத்து சென்றுவிடுகின்றன. குரங்குகளுக்கு பயந்து ஜன்னல் கதவுகள் போடப்பட்டு இருந்தாலும், அவற்றை உடைத்து உள்ளே புகுந்து  எடுத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும்  இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்,  மேலும் கிராமத்தில்  உள்ள  குரங்குகளைக் கூண்டு வைத்து பிடித்து தொகரப்பள்ளி அல்லது செங்கம் காட்டில் விட கோரிக்கை விடுத்துள்ளனா்.

—ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

Halley Karthik

போலி பி.எச்.டி பட்டம்.. சினிமா பெண் தயாரிப்பாளர் திடீர் கைது!

EZHILARASAN D

தமிழ்நாட்டில் மார்ச் 19 வரை மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Web Editor