பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

9-வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமானம் செய்து வைத்தார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர்…

9-வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் முதலமைச்சர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இந்தியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இந்தியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்” என தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். 

பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை நிதீஷ் குமார் ஆளுநரிடம் வழங்கினார். தொடர்ந்து பீகாரில் ஆட்சி அமைப்பதற்கும் உரிமை கோரியுள்ளார். 243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு உள்ள 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை பீகார் ஆளுநரிடம் நிதீஷ் குமார் வழங்கினார். இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், 9வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமானம் செய்து வைத்தார். தொடர்ந்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பீகாரின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.