முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

நீலகிரி அருகே மசினகுடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது.

நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நாட்களை கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து, புலியை பிடிக்க முடியாவிட்டால், சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது.

சிங்காரா வனப்பகுதிக்குள் அதிரடிப் படையினருடன் நுழைந்த வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 80-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவ குழு, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறை ஊழியர்களும் புலியை பிடிக்கும் முயற்சி ஈடுபட்டனர்.

தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாலை 6 மணிக்கு மேல் வன விலங்குகளை பிடிக்கக் கூடாது என தடை இருப்பதால், புலியை பிடிக்கும் பணி நேற்று மாலை 6 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் புலியை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க மமதாவுக்கு உத்தரவு!

தருமபுர ஆதினத்தை நானே தோளில் சுமப்பேன்: அண்ணாமலை

தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

Gayathri Venkatesan