முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

4- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. தொற்றைத் தடுக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்பதால், அதை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப் பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயம் செய்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த முதல்கட்ட தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் பேருக்கும், 19ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 16.41 லட்சம் பேருக்கும், 26ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட முகாமில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்கள் அனைத்திலும் தமிழக அரசு நிர்ணயத்ததை விட, அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டன.

இந்நிலையில் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. தற்போது, 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப் பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானே

Vandhana

வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள்: ஓபிஎஸ், இபிஎஸ்

Ezhilarasan

நீட் தேர்வு தொடர்பான கருத்துகள் குறித்து ஏ.கே.ராஜன் விளக்கம்!

Jeba Arul Robinson