கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!

புதுச்சேரி யானமில் கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்த ஆந்திராவை சேர்ந்த நபரை மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை அருகே யானம் என்ற…

புதுச்சேரி யானமில் கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்த ஆந்திராவை சேர்ந்த நபரை மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை அருகே யானம் என்ற பகுதி உள்ளது. இது புதுச்சேரி மாநில எல்கைக்கு உட்பட்டது. கோதாவரி ஆற்றில் மீனவர்கள் மின்பிடித்து கொண்டிருந்தபோது பாலயோகி ஆற்றுப்பாலத்தின் மேலிருந்து ஒருவர் ஆற்றில் குதித்துள்ளார்.

இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக படகை விரைவாக செலுத்தி அந்த நபரை காப்பாற்றினர். இதனிடையே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை மீனவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக யானம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆற்றில் குதித்த நபர் ஆந்திர மாநிலம் ராமசந்திரபுரத்தை சேர்ந்த கும்மண்டலு வீராசாமி(40), என்பதும், கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.