ஆசிரமத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி. சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியில் ஹேமாமாலினி (20) வசித்து வருகிறார். இவர் தலைவலி மற்றும் வயிற்று வலியால் பல நாட்களாக தவித்து வந்திருக்கிறார். இவரது தந்தை ராமகிருஷ்னன் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இதுகுறித்து அவர் முனுசாமி என்ற பூசாரியை அணுகியுள்ளார். விஷயம் என்னவென்றே தெரியாமல் நாகதோஷம் தான் இருக்கும் எனவும் இது தினசரி பூஜையின் மூலமாக சரி செய்துவிடலாம் எனவும் பூஜை வேலைகளுக்காக தனது ஆசிரமத்திற்கு ஹெமாமாலினியை அழைத்து வருமாறு முனுசாமி கூறியிருக்கிறார்.
பூசாரி முனுசாமி ஊத்துக்கோட்டை அருகேயுள்ள வெள்ளாத்துக்கோட்டை என்ற கிராமத்தில் கடந்த 20 வருடமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். தொடர்ந்து அமாவாசை, பவுர்ணமி அன்று பூஜை செய்து வந்தால் தோஷம் நீங்கிவிடும் என பூசாரி கூறியதை நம்பி ஹேமாமாலினியை அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி தந்தை அழைத்து சென்றிருக்கிறார். தினமும் ஒரு பூஜைவும் நடத்தப்பட்ட வந்தது. இதே போல் ஒரு வருடமாக மாணவிக்கு இவ்வகையான பூஜைகள் நடந்து வந்தது.
இதனால் வாரத்தில் 2, 3 நாட்கள் ஹேமாமாலினி ஆசிரமத்திலேயே தங்கிவிடுவார். ஆசிரமத்தில் தங்கியது மட்டும் இல்லாமல் பூசாரி முனுசாமிக்கு பணிவிடைகளும் செய்து வந்துள்ளார். இதே போல் கடந்த 13ம் தேதி நள்ளிரவு பூசாரிக்கு தனது பணிவிடைகளை முடித்து விட்ட பிறகு அடுத்த நாள் காலையில் மாணவி ஹேமாமாலினி விஷமருந்தி உயிரிழப்புக்கு முயன்றிருக்கிறார். மானவியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது பெற்றோர்களை அழைத்து மாணவியை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினார்.
தகவலறிந்து விரைந்து வந்த மாணவின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பல மணி நேரமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதனையடுத்து ஆசிரமத்தில் தங்கியிருந்த போது மாணவி உயிரை மாய்த்துக் இறந்ததால், சந்தேகம் இருப்பதாக உணர்ந்த மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, பென்னலூர் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.








