இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் கூண்டு
வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில்
கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் நாள்தோறும் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். தற்போது அந்தப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டு அந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் சிறுத்தை பிடிபட்டுவிடும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.