தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் சோதனை – வழக்கறிஞர் உட்பட 5 பேர் அதிரடி கைது

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ இன்று சோதனை நடத்திய நிலையில், பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகிகள் ஐந்து பேர் கைது செய்யபட்டுள்ளனர்.  தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 6 இடங்களில் என்ஐஏ…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ இன்று சோதனை நடத்திய நிலையில், பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகிகள் ஐந்து பேர் கைது செய்யபட்டுள்ளனர். 

தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கூரிய முனைகள் கொண்ட ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் உட்பட பல குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக அப்துல் ரசாக், வழக்கறிஞர் முகமது யூசுப், வழக்கறிஞர். M. முகமது அப்பாஸ், கைசர் A, சாதிக் அலி ஆகிய ஐந்து பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சட்டவிரோத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, என்ஐஏ-வால் பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 10 நபர்களுக்கு எதிராக என்ஐஏ, இந்தாண்டு மார்ச் 17 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதையும் படியுங்கள் :

தொடர் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சதி செய்து, பிஎஃப்ஐ சித்தாந்தத்துடன் இணையாத, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான அதன் திட்டங்களை எதிர்க்கும் எதிரிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 15 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.