முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடல் அருகே நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

தமிழக மலைப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும் பரவலாக மிதமான மழை இருக்கும் என்றும் மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட “மீம்”!

Karthick

மக்கள் எதிர்பார்த்தபடி ஆட்சி மாற்றம் நிகழும் : முத்தரசன்

Ezhilarasan

பிரதமர் உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பு!

Karthick