முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐதராபாத்தை வீழ்த்தி தனது 2வது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி

பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக படிக்கல் 11 ரன்னில் வெளியேறினார்.

அவரை அடுத்து வந்த ஷபாஸ் அகமது 14 ரன்களில் வெளியேற அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடி காட்டி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணமே இருந்தன. அணியின் கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரிகளில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்களும் விராட் கோலி 33 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சஹா 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே டேவிட் வார்னருடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருந்த போது டேவிட் வார்னர் 54 ரன்னில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement:

Related posts

’மே மாதம் ஆட்சி அமைக்கும் திமுக, பெரியாரின் பெயரை நிலைநாட்டும்’- வைகோ

Gayathri Venkatesan

ஐபிஎல் : மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி!

Ezhilarasan

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்!