சென்னை பல்லாவரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ்& சர்வீஸ் நல சங்கம், நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ் பொக்கிஷம் சார்பில் இலவச கண்கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை பல்லாவரம் நூர்மஹாலில் கடந்த வாரம் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் சங்கரா நேந்த்ராலய கண் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சுமார் 50 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்வாட் (swott) அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சமீர், விஜய் டி.வி புகழ் சிம்பு மதன், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர்.
மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ் &சர்வீஸ் நல சங்கம்மாவட்ட தலைவர் வெங்கடேஷ், செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் செய்திருந்தனர். பின்னா் இலவச கண் கண்ணாடியை பெற்ற பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ் &சர்வீஸ் நல சங்கம் மற்றும் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்திற்கு நன்றி தெரிவித்துகொண்டனர்.
ரூபி.காமராஜ்







