2018 திரைப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனியுடன் கைகோர்க்கும் விக்ரம்! -லேட்டஸ்ட் அப்டேட்…

விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை 2018 பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’. கடந்த மே 5-ஆம் தேதி…

விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை 2018 பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’. கடந்த மே 5-ஆம் தேதி வெளியான இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த பெருமழை, வெள்ளம் குறித்த இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஹிட்டான இந்தப் படம், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து ஜூட் ஆந்தணி ஜோசப் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி இவர் இயக்கம் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோரின் கூட்டணியில் நடிகர் விக்ரம் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.