இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் துள்ளி குதிக்க வாடிவாசல் தயார். சுமார் 1000 காளைகள், 305 வீரர்கள் களம் இறங்கத் தயார் நிலையில் உள்ளது.
மதுரை மாவட்டம் பலமேட்டில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்று (16ம்தேதி)
நடைபெற உள்ளது. இதையொட்டி வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை, பரிசுப்பொருள் மாடம், மற்றும் இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள், காளைகளுக்கு வைக்கோல் உணவு, தண்ணீர் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பாலமோடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள சுமார் 1000 காளைகளும், 305 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் நாளை காலை காளைகளைப் பரிசோதனை செய்ய 60 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், வீரர்களுக்கு 160 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் தயாராக உள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உடற் தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்படுவர். தொடர்ந்து வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ,மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும், அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு கார் பரிசாகவும், சிறப்பாக விளையாடி முதல்பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு இரசக்கரவாகனமும், 2 ம்பரிசு பெறும் காளை உரிமையாளருக்கு நாட்டுப்பசுவும், கன்றுக் குட்டியும் பரிசாக வழங்க தயாராக உள்ளது.
மேலும் 2 எஸ்.பி க்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.







