16வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மனிரத்னம் இயக்கி, இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்திய அளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூ.500 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆசிய பிலிம் விருதுகள் அமைப்பு 16வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது. இதில் ஆசிய திரைப்பட விருதுகளின் போட்டிப்பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை பரிந்துரை குழு அறிவித்தது. மேலும் வருகிற மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பேலஸ் மியூசியத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது எனவும் இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்குனர், சிறந்த உடை அலங்காரம், உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது.