நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகளை அவசரமாக மண்ணை போட்டு மூடிய மருத்துவமனை நிர்வாகம்..!!

நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியக மருத்துவக் கழிவுகளை அகற்றாமல் அவசர அவசரமாக மருத்துவமனை நிர்வாகம் ஜேசிபி எந்திரத்தை வைத்து மண்ணை நிரப்பி மூடியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும்…

நியூஸ்7 தமிழ் செய்தியின் எதிரொலியக மருத்துவக் கழிவுகளை அகற்றாமல் அவசர அவசரமாக மருத்துவமனை நிர்வாகம் ஜேசிபி எந்திரத்தை வைத்து மண்ணை நிரப்பி மூடியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே எரிக்கப்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கான  விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல நாட்களாக மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டினர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அவை மருத்துவ கழிவுகள் இல்லை என்றும்..  யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த தனியாக பயோ வேஸ்டேஜ்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ்  தொலைக்காட்சியில்  செய்தி வெளியானது. நியூஸ் 7 தமிழ் செய்தியின் எதிரொலியாக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கண்காணிப்பாளர்கள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த மருத்துவமனை டீன் ரேவதி தெரிவித்ததாவது..

”மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகம் அல்ல. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 150 முதல் 300 கிலோ மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு வருகிறது.

அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இருந்து தினமும் 100 கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.. மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்கள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.” என தெரிவித்தார்.

இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியின் எதிரொலியால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றப்படாமல் அனைத்தும் ஜேசிபி எந்திரம் மூலம் மண்ணை நிரப்பி மூடப்பட்டது. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடம் தங்களுடையது இல்லை என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்த நிலையில் தற்போது மருத்துவ கழிவுகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.