வாரிசு படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஷ்ரா கிரியேஷ்ன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீதாகோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த ராஷ்மிகா கதாநயாகியாக நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
https://twitter.com/SVC_official/status/1585543373091667969
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சில காட்சிகள் அவ்வப்போது வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் வாரிசு படக்குழு படத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஷ்ரா கிரியேஷ்ன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏரளாமான வாரிசு படத்தின் புகைபடங்களை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







