சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங் என்ற பெயரில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி கள ஆய்வு நடத்தி வருகிறது.
விஜயதசமி, ஆயுத பூஜை அடுத்ததாக தீபாவளி என பண்டிகை காலம் என்பதால் ஷாப்பிங் செல்ல மக்கள் தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் படையெடுப்பார்கள்.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில், “வணிக வளாகங்கள் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன; அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை வாகனங்களால் ஆக்கிரமிப்பு உள்ளது” என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தி.நகர் உஸ்மான் சாலையில் மக்கள் வசதிக்கு ஏற்ப போக்குவரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு வசதிகளில் கவனம் செலுத்தவும்
பழைய வண்ணாரப்பேட்டை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் அதிகம் கூடும் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெரு, சிறு, குறு வணிக நிறுவனங்களில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களே உள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீயணைப்பான் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் வணிக நிறுவனங்கள்; பெரு நிறுவனங்களின் கடைகளின் வெளியே உணவு விற்க சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வணிக வளாகங்கள் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தீத்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
மாம்பலம் ரயில் நிலையத்தையும் தி.நகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதை நடைபாதை பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்; அவதிக்குள்ளாகும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைபாதையை விரைந்து முடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டி பஜாரில், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய கடைகளில் அவசர காலங்களில் வெளியேற ஒரே வழி மட்டுமே இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஷாப்பிங் வசதிகளை மேற்கொள்ளாத வணிக நிறுவனங்கள், பாண்டி பஜாரில் உள்ள உணவு சிற்றுண்டிகள் விற்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளின் தரம் குறித்து தொடர் கண்காணிப்பு தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தவிக்கும் தலைநகரம், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.








