முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் நேஷனல் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நியூஸ் 7 தமிழ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதை தொடர்ந்து மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் கையெழுத்திட்டனர்.பெண்களின் வளர்ச்சிக்காக நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் இது போன்ற நிகழ்வுகள் பெரும் பாராட்டுக்கு உரியது என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் கோவை சிரவை ஆதினம், கெளமார மடலாயத்தில் உள்ள TRA மேல்நிலைபள்ளி மற்றும் TKS மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நியூஸ் 7 தமிழின் ‘நிகரென கொள், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில், நியூஸ் 7 தமிழ் மற்றும் தஞ்சை சைக்கிள் அசோசியேசன் சார்பில் நிகரென கொள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ் சவுகான் மற்றும் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையேற்று துவக்கி வைத்தனர். இதில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்திருக்கும் இந்த பாலின சமத்துவத்திற்கான சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சி அளிப்பதாக மருத்துவர் பிரதீபா சுரேந்தர் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2 நாட்களில் 200 கோடி அள்ளிய ’பதான்’ – ஷாருக்கானின் ரியல் கம்பேக் என ரசிகர்கள் கருத்து

Yuthi

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Jayasheeba

நெல்லை மாவட்ட மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்.! 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Web Editor