முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கிரிஸ்டஸ் ரெக்ஸ் மேல்நிலை பள்ளி:

நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ள கிரிஸ்டஸ் ரெக்ஸ் மேல்நிலை பள்ளியில் , நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பள்ளி தாளாளர் பிஷப் செந்தில்நாதன், கூறுகையில் மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்தார்.

புதுக்கோட்டை, மனவிடுதி அரசினர் உயர்நிலை பள்ளி:

புதுக்கோட்டை மாவட்டம், மனவிடுதி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நிகரென கொள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் 250 -க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்திலும் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் தி.சு.கி அரசினர் மேல்நிலைப் பள்ளி:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூரில் இயங்கி வரும் தி.சு.கி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பீம்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் 500-க்கும் மேற்பட்ட
மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

Janani

திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது: துரை.வைகோ

Halley Karthik

ஆவின் பணி நியமன முறைகேடு; அறிவிப்பை ரத்து செய்த அமைச்சர்

G SaravanaKumar