முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது – அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்தின் காலம் நவம்பர் 27ம் தேதியுடன் காலாவதியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 2022 நவம்பர் 22ம் தேதி ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான சட்ட மசோதா குறித்த நவம்பர் 24ம் தேதி விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் நவம்பர் 25ம் தேதி ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வருகிற பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் என்று அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Web Editor

2024 தேர்தலில் பாஜகவிற்கு போட்டியே இல்லை- உள்துறை அமைச்சர் அமித்ஷா

Jayasheeba

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Halley Karthik