முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ், தமிழ்நாடு முழுவதும், நிகரென கொள் விழீப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துவருகிறது. அதன்ஒருபகுதியாக, தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம், தென்காசியில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நிகரென கொள் 2023 பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டனர்.

அதைத் தொடர்ந்து மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற நியூஸ் 7 தமிழின் விழிப்புணர்வு இயக்கத்திலும் பேராசிரியர்களும் மாணவர்களும் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.மேலும், நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சியின் மூலம், பாலின சமத்துவம் குறித்து அறிந்துகொள்ள ஒரு நல் வாய்ப்பாக ஏற்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதேபோல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ASP பல்வீர் சிங் IPS மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்,  நிகரென கொள் 2023 பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண் காவலர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana

பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு-சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

Web Editor

நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார்: பிரேமலதா விஜயகாந்த்

Niruban Chakkaaravarthi