27 C
Chennai
December 8, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது அந்த ஆய்வு அறிக்கையை ஐஐடி நிர்வாக இயக்குனர் காமகோடி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர்
வெளியிட்டனர். இந்திய அளவில் சாலை விபத்தில் ஒரு ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் பேர்
உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 17,000 மேற்பட்டோர் உயிர் இழக்கின்றனர் என்பது
குறித்த அந்த ஆய்வறிக்கையானது இன்று வெளியிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது,  வைரஸ் காய்ச்சலை தடுப்பதற்கு ஆயிரக்கணக்கான முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு
வருகின்றன. யாராவது ஒருவருக்கு கிராமத்தில் காய்ச்சல் இருந்தாலும் கிராமம் முழுவதும்
அசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம். திருச்சியில் இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறித்து டெஸ்ட் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரிசல்ட் வந்ததும் அதன் முழு விவரங்கள் தெரியவரும் என்றார்.

சென்னை ஐ ஐ டி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குனர் காமகோடி பேசுகையில்,
செப்டம்பர் மாதம் 2022 ஆம் தேதியில் இருந்து இதுவரைக்கும் 3 தற்கொலைகள் நடந்து உள்ளது வருத்தம் அளிக்கிறது. உடல் நலம், தனிப்பட்ட விஷயம், அகாடமி படிப்பு விஷயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் நடந்துள்ளன. ஐ ஐ டி தற்கொலை தடுக்க குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், Who உலகளவில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் 1 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது. தற்கொலை தமிழகத்தில் அதிகம் நடப்பதற்கான காரணம் அறிய மருத்துவமனைக்கு சென்று
பாதிக்கப்பட்டவர்கள் இடம் கேட்டபோது, எலி மருந்து, சாணி பவுடர்களை தற்கொலை செய்ய பயன்படுத்துகின்றனர். இவற்றின் மீது தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டோம்.


இதையும் படிக்க: அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தது 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக அரசின் சார்பில் 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில். சாணி பவுடருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அறிக்கை அனுப்பியுள்ளோம். பயிர்களுக்கு அளிக்கும் பூச்சி மருந்து வாங்க தனியாக வரும் நபர்களுக்கு மருந்து தர கூடாது, கூட்டமாக வருபவர்களுக்கு மட்டும் தர வேண்டும் என்று
அறிவித்துள்ளோம். தற்கொலைகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மனம் என்கிற திட்டம் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதில் இருந்து மீண்டு
வருவதற்கும், தற்கொலைக்கு முயல்வபவர்களையும் தடுக்க இந்த மனம் திட்டம்
பயனுள்ளதாக உள்ளது. உயர்கல்வி துறையுடன் பேசி விரைவில் கலை அறிவியல்
கல்லூரிகளிலும் மனம் திட்டம் தொடங்க உள்ளது என்றார்.

ஐஐடியில் நடைபெற்ற தற்கொலை குறித்த கேள்விக்கு, இந்த தற்கொலை சம்பவம் கேட்டு ஒரு தந்தையாக இயக்குனர் வருதியுள்ளார். இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்கொலை என்பது தீர்வல்ல, நம் வாழ்வது நம் கையில் தான் உள்ளது, மாணவர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தற்கொலை என்பது 100% தவிர்க்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்க பட்டுள்ள நிலையில். நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனுப்பபட்டுள்ளது.

காமகோடி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், கொரோனா காலத்திற்குப் பிறகு சகஜமாக அனைவரிடமும் பழகுவது என்பது கடினமாக உள்ளது. பல மாணவர்கள் தனிமையை விரும்புகின்றனர். இனிவரும் காலங்களில் மாணவர்களுடன் சேர்ந்து அவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy