நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: கல்லூரி பெண் பேராசிரியர்கள், மாணவிகளுக்கு 3 நாள் விடுப்பு அறிவிப்பு

நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் கையெழுத்து இயக்கம் எதிரொலியாக, உத்திரமேரூர் அருகே இயங்கிவரும் கல்லூரியில், மாதவிடாய் காலத்தில் பெண் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மூன்று நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண்கள்…

நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் கையெழுத்து இயக்கம் எதிரொலியாக, உத்திரமேரூர் அருகே இயங்கிவரும் கல்லூரியில், மாதவிடாய் காலத்தில் பெண் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மூன்று நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாக்கம் காஞ்சி ஸ்ரீ மகாலட்சுமி கலை அறிவியல் மகளிர் கல்லூரி:

காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் காஞ்சி ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இதில், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதனை அடுத்து கல்லூரியின் தாளாளர் டாக்டர் சுப்பிரமணியம், அந்த கல்லூரியின் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள் விடுமுறை அளிப்பதாக அறிவித்தார்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி:

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி:

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

கன்னியாகுமரி, மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி:

கன்னியாகுமரி மாவட்டம் மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.

காட்டுமன்னார்கோவில் ஜிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜிகே சி.பி.எஸ்.சி பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் நடைபெற்றது. அதில் நியூஸ் 7 சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவத்திற்கான நிகரென கொள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளியின் தாளாளர் ஜி.குமாரராஜா, மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு உறையை ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து பள்ளியின் செயலாளர் ஜி.கே அருண் மாணவிகளுக்கு மாதவிடாய் கையெழுத்து இயக்கத்தை பற்றியும் நியூஸ் 7 தொலைக்காட்சி முன்னெடுத்து நடத்துவதை குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்றனர் . அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்து இயக்கத்தில், பள்ளியின் ஆசிரியர்கள் ,உதவி ஆசியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கையெழுத்து இட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.