ஜெயலலிதா வேடத்தில் சமபாலின விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி!

மகளிர் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று வேடமணிந்து சமபாலின விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர்…

மகளிர் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று வேடமணிந்து சமபாலின விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 

மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெரியார், அம்பேத்கர், பாரதியார் போன்றோரின் வேடம் அணிந்து வந்த மாணவிகள் பார்வையாளர்களை கவரந்தனர். 
தொடர்ந்து மருத்துவம், பொறியியல், கல்வி, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருவதை வெளிகாட்டும் வகையில் சம பாலினத்தை வலியுறுத்தும் விதமாகவும் மாணவிகள் வேடமணிந்து வந்து அசத்தினர். 

குறிப்பாக அரசியலில் சாதனை படைத்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்று உடை அணிந்து வந்த மாணவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியின் நிறைவாக பல துறைகளில் சாதித்த பெண்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

—- ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.