திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியில், சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை அருகே தரைப்பாலப் பணிகள் தொடங்கி 7 மாதங்கள் ஆகியும் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி பகுதியில், சென்னை பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை அருகே தரைப்பாலம் அமைப்பதற்குக் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கி சில வாரங்களிலேயே அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால், இவ்வழியாகச் செல்லும் அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் என இவ்வழியாகச் செல்லும் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெரும் விபத்துகளைத் தவிப்பதற்குத் தரைப்பாலக் கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
— சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: