டெல்டா பகுதியில் கள ஆய்வு நடத்தி விவசாயிகளின் பாதிப்பை எடுத்துரைத்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும் மத்திய அரசின் முகவர்களாக நெல் கொள்முதல் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவம் தவறி செய்யும் மழையால் குருவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பேரழிவை சந்தித்து வருகின்றனர். நெல் கொள்முதல் மற்றும் நெல்லின் ஈரப்பதம் குறித்து மாநில அரசே முடிவு செய்யும் அதிகாரத்தை நிரந்தரமான கொள்கை அரசாணையை மத்திய அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை மத்திய அரசு மறுக்கிறதா, மாநில அரசு பொறுப்பேற்காமல் தட்டி கழிக்கிறதா என்பது புரியாத ஒன்றாக உள்ளது. தற்போது மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் தேவையான ஒன்று என்றாலும் இத்தகைய தளர்வுகளை மாநில அரசு கேட்டால் அதை செய்வதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. பருவநிலைக்கு ஏற்றவாறு கொள்முதல் வழிமுறைகளை மாநில அரசுதான் உருவாக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
அண்மைச் செய்தி: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
தற்போது தை மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் பருவம் தவறி பெய்த மழையில் மழைநீரில் மூழ்கி அழுகியது. இதனை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு எனும் மிகப்பெரிய நிகழ்ச்சி மூலம் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்து நெற்பயிர் பாதிப்புகளை எடுத்துரைத்தனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு நெல் கொள்முதலில் தளர்வுகள் அறிவித்துள்ளதற்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.