பெண் ஒருவர் பெரிய மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஊர்வன உங்களை பயமுறுத்தினால், இந்த வீடியோ உங்களுக்கானது அல்ல. பெண் ஒருவர் பெரிய மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. @thereptilezoo என்ற Instagram பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது மற்றும் ஆன்லைனில் 2.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில் உள்ள உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் மலைப்பாம்பை தனது தோளில் சுமந்து செல்வது தனது தினசரி வழக்கம் போல் உள்ளது. மிகவும் சர்வ சாதாரணமாக அவர் அவ்வளவு பெரிய உருவம் கொண்ட மலைப்பாம்பை, சிரித்துக் கொண்டே ஏதோ குழந்தையை தூக்குவது போல் துக்கி வைத்திருக்கும் இந்த காணொளி பார்பவரை வியப்பிற்க்குள் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தின் பலரின் ஆர்வத்தை இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தூண்டியுள்ளது. அதில் பலர் கருத்து தெர்டிவிக்கும் பிரிவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவை பார்த்த சில பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் தங்கள் பயத்தை வெளிப்படுத்தி எதிர்வினையாற்றினர்.







