புதிதாக திரைத்துறைக்கு வரவுள்ளவர்கள் அரசியல், பண்பாடு, சமூகம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை கற்று இருக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் இயக்குநர் வெற்றிமாறன் நடத்தி வரும் திரை பண்பாடு ஆய்வகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிதாக திரைத்துறைக்கு வரவுள்ளவர்கள் அரசியல், பண்பாடு, சமூகம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை கற்று இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘2,014 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!’
தொடர்ந்து பேசிய அவர், ஒரு மனிதனைச் சிந்திக்க வைப்பதும் செயல்பட வைப்பதும் ஒரு கோட்பாடு எனத்தெரிவித்தார். மேலும், அரசியல் பண்பாடு மதம் சார்ந்த கோட்பாடாக இருக்கலாம் எனத் தெரிவித்த அவர், கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால், மதம் கட்டாயம் கிடையாது எனக் கூறினார். இந்தியாவில் மதம் சார்ந்த தேசியத்தை முன்வைத்து கோட்பாட்டை வழிநடத்துகிறார்கள். மதம் சார்ந்த தேசியத்தைக் கட்டமைக்க இங்குக் கோட்பாடு வைத்துள்ளார்கள், ஒரே தேசமாக இருக்க வேண்டுமென்றால் ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும் எனக் கூறினார்.








