முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்”: எல்.முருகன்

மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற பின்னர் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் பிரதமர் மோடி, உற்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இதை பதவி என்று கூறுவதை விட தனக்கு கொடுக்கப்பட்ட பணியாக கருதுவதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

அனைத்துப் பெண்களும் அர்ச்சகராகலாம் திட்டம்: திருமாவளவன் தகவல்

Gayathri Venkatesan

மோடி அமைச்சரவை 2.0 : 43 அமைச்சர்கள் பதவியேற்பு

Saravana Kumar

வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!

Gayathri Venkatesan