முக்கியச் செய்திகள் விளையாட்டு

யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 2வது அரையிறுதி போட்டி லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டேம்ஸ்கார்டு கோல் அடித்து அசத்தினார். 39வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சாக்கா அடித்த பந்து, டென்மார்க் வீரர் ஜாரின் காலில் பட்டு சேம் சைடு கோலாக மாறியது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இதனால், வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் 14வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அந்த அணியின் கேப்டன் கேன் கோலாக மாற்றினார். இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை வரலாற்றில், முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி இத்தாலியை எதிர்கொள்கிறது.

Advertisement:
SHARE

Related posts

வரலாறு படைப்பாரா பினராய் விஜயன்?

Ezhilarasan

MI VS DC; இன்றைய போட்டியில் வெற்றி பெற போகும் அணி எது?

Saravana Kumar

ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள்: தலா ரூ.5லட்சம் வழங்கிய அமைச்சர்

Vandhana