2021 சட்டப்பேரவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் பொருட்டல்ல என்றும் மக்கள் நலனே நமது குறிக்கொள் என்றும் கூறியுள்ளனர்.
மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை நாம் இழந்தாலும் மக்களின் பேரன்பு தொடர்கிறது என்றும் தேர்தல் தோல்வி தொய்வையும், மனசோர்வையும் அளித்திருந்தாலும், தொண்டர்களின் பயணம் வீறுநடை போடுகிறது என தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்பதை தவிர வேறு எந்த சிந்தனையும் ஏற்படத் தேவையில்லை என்று கூறியுள்ள அவர்கள், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.







