புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாலை முதல் தொடங்குகிறது.
ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் கொச்சினுக்கும் பெங்களூருக்கும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 11 சிறப்பு ரயில்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்படுகின்றன.