நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ’துணிவு’ திரைப்படத்தின் புதிய பாடல் குறித்த அப்டேட்டை நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் 61வது திரைப்படமான ‘துணிவு’ ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாகும். இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடைய உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனமும், தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தில் 3 இடம்பெற்றுள்ளதாகவும், அதில் அனிரூத் பாடியிருக்கும் ’சில்லா சில்லா’ என்ற சிங்கிள் பாடல் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் மஞ்சுவாரியர், ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து மஞ்சுவாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘ஜிப்ரான் இசையில் ’துணிவு’ படத்தில் ஒரு பாடலை பாடியது எனக்கு திரில்லிங் அனுபவமாக இருந்தது. இந்த பாடலை கேட்க அனைவரும் தயாராக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.