கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கூடுதல் பள்ளிகள் கட்டித்தரப்படும் என சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் சென்னை கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று காலையில் தனது பரப்புரையை தொடங்கிய எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை குடிசை மாற்று வாரியம், கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று பொதுமக்களிடையே உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பரப்புரையில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றார். உடன் காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தனர்.







