முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ட்வீட்டரில் ட்ரெண்டான ‘rippedjeans’

பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்தபடி #rippedjeans என்ற தலைப்பில் பதிவிடும் புகைப்படங்கள் ட்வீட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட தீரத் சிங் ராவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், “பெண்கள் ஜீன்ஸ் அணிவது சமூகத்திற்கு ஒரு மோசமான முன்னுதாரணம். அதிலும் பலர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்துகொண்டு சாலையில் எவ்வாறு செல்கிறார்களோ” என கருத்து தெரிவித்திருந்தார். முதல்வரின் கருத்து பிற்போக்குத்தனமாக இருப்பதாகக் கூறி பல பெண்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ட்வீட்டரில் #rippedjeanstwitter எனும் ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சனின் மகள் வழி பேத்தியான நவ்யா நந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில், “ஜீன்ஸ் அணிவது என் விருப்பம். அதில் நான் பெருமைகொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். தீரத் சிங் ராவத் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தனது ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தடகள போட்டியில் சாதிக்க துடிக்கும் 50 வயது இளைஞர்!

G SaravanaKumar

மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!

Halley Karthik

தனித்தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்: திருமாவளவன்

EZHILARASAN D