முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு:பேருந்துகளின் நேர அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருவதையொட்டி பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களும் பேருந்துகளின் இயக்க நேரத்தை அறிவித்துள்ளன.

மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் கோவைக்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையும் கொடைக்கானலுக்கு 5.45 மணி வரையும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வரை செல்லும் பேருந்துகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் பழனி, கரூர் மற்றும் கம்பம் வரை செல்லும் பேருந்துகள் இரவு 7 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல், தேனி மற்றும் பெரியகுளத்துக்கு இரவு 8 மணி வரையும், நிலக்கோட்டைக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவிலுக்கு மாலை 5 மணி வரையும்
ராமேஸ்வரம் மற்றும் தென்காசிக்கு 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலிக்கு இரவு 7 மணி வரையும் சிவகங்கை, கோவில்பட்டி மற்றும் சிவகாசிக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மதுரை அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலத்தில் இருந்து ஈரோடு, தருமபுரி மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சேலத்தில் இருந்து சென்னைக்கு அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் ருச்சி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் ருநெல்வேலியில் இருந்து மதுரை வரையிலான பேருந்துகள் அனைத்தும் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நிற்காமல் சென்ற காரில் ரூ.5 கோடி: விரட்டிப் பிடித்த போலீசார்

Gayathri Venkatesan

தமிழகத்துக்கு ரூ.286.91 கோடி பேரிடர் நிதிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

Niruban Chakkaaravarthi

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Jayapriya