சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் நிமிடத்திற்கு ஒரு ரயில் இயங்கும் என்றும், நெரிசல் குறைவாக உள்ள இடங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.







