நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சம்மந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களின் அனுமதியில்லாமல் திரும்ப பெற கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தி அந்த குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பதியப்பட்டு விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை என்ன என்பது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை, சிபிஐ, உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய விசாரணை அமைப்புகளுக்கு கெடு விதித்து மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.








