டாஸ்மாக் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு!

டாஸ்மாக் கடைகள் 12 மணி முதல் மணி 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக…

டாஸ்மாக் கடைகள் 12 மணி முதல் மணி 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ள நிலையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டீ கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம். ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. அதே நேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இந்நிலையில் மருந்தகங்கள், மருந்து வாகனங்கள், உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பால் வாகனங்களுக்குத் தடை இல்லை.

இதற்கிடையே டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே 12 மணி முதல் 9 மணி வரை செயல்பட்டு வந்தது. அதன் நேரத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் நேரத்தைக் குறைத்து காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
…………..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.