பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முன்பே உருவாக்கியுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் “குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” உருவாக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த செயலியின் மூலம் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் போன்ற வளர்ச்சிகளை கண்காணிக்க முடியும்.
ஊட்டச்சத்து காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை கண்டறியவும் இந்த செயலி உதவும். குழந்தையை அதன் பிறந்தநாள் முதல் கண்காணித்து பிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைகளையும் இந்த செயலி கண்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலியை ஆண்டிராய்டு அலைபேசிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளது.